இன்றைய பஞ்சாங்கம் :
ஜூலை 2-7- 2025 ||
275 தமிழ் விஸ்வாவசு வருடம் ஆணி மாதம் 18ஆம் நாள் புதன்கிழமை
உத்திரம் நட்சத்திரம்( காலை 11 மணி 8 நிமிடம் வரை)
அதன் பிறகு ஹஸ்தம் நட்சத்திரம்
வளர்பறை சப்தமி திதி
நன்பகல் 12 மணி ஒரு நிமிடம் வரை
அதன் பிறகு அஷ்டமி திதி
கும்ப ராசிக்கு சந்திராஷ்டமம் அமிர்த யோகம் காலை 11 மணி வரை
அதன் பிறகு யோகம் சரியில்லை
இன்றைய நல்ல நேரம் என்னும் சுபகோரைகள் காலை 6ு மணி முதல் 7ு மணி வரை 9ன் மணி முதல் 10 மணி வரை பிற்பகல் இரடு மணி முதல் மூு மணி வரை மாலை காலைநான்ு மணி முதல் 5ு மணி வரை
இன்றைய
ராகுகலம் நன்பகல் 12 மணி முதல் பெற்பகல் 1:30 மணி வரை இன்றைய
எமகண்டம் காலை 7:30 மணி முதல் 9 மணி வரை
இன்றைய குளிகை நேரம் காலை 10:30 மணி முதல் நன்பகல் 12 மணி வரை
இன்றைய கிரக நிலவரம் :-
ரிஷபத்தில் சுக்கிரன் மிதுனத்தில் சூரியன் குரு கடகத்தில் புதன் சிம்மத்தில் செவ்வாய் கேது கன்னியில் சந்திரன் கும்பத்தில் ராகு மீனத்தில் சனி
மேஷ ராசி:-
இன்றைய ராசிபலன் மேஷ ராசி ராசிநாதன் ஐந்தாம் இடத்தில் இருக்காரு ராசிநாதனுக்கு முன்னாடி சந்திரன் பின்னாடி புதன் பரிவர்த்தனை பெற்றிருப்பது உங்களுக்கு பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் இருக்கும்.
குழப்பங்கள் நிவர்த்தியாகும். அலுவலக ரீதியாக உங்களுக்கு பதவி உயர்வு கொடுக்காமல் தடுத்து தடுத்துட்டு இருக்கிற நபர்கள் தோல்வி அடைவார்கள் அவர்களை வெல்லும் ஆற்றல் ஏற்படும். எதிரிகளை வென்று உங்களுடைய கௌரவத்தை காப்பாற்றி கொள்வதற்கு உண்டான யோகம் ஏற்படும். வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் வருமான அதிகரிப்பு ஏற்படும். இனிமையான வார்த்தைகள் பேசி எதிரிகளை வெள்ளக்கூடிய ஆற்றல் ஏற்படுகின்ற சிறப்பான நாள். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று கவலைகள் விலகும் நாளாக இருக்கும். மனசுல் இருக்கக்கூடிய கவலைகள் போகும்.
குழந்தைகளை பற்றிய கவலைகள் விலகுறதுனால மனநிறைவு ஏற்படும். வியாபாரிகள் மற்றும் படிக்கின்ற குழந்தைகள் மேன்மை அடைவார்கள். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். குறிப்பா உங்க வியாபாரம் மூலமாக வருமானம் ஏற்படும். உங்களுடைய செயல்பாடுகள் உங்களுக்கு மரியாதையை பெற்று தரும். படிக்கின்ற குழந்தைகள் தங்களுடைய குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவார்கள். அதே சமயம் உங்களுடைய எதிரிகள் சார்ந்த விஷயங்கள்ல நீங்கள் எடுக்கும் முடிவுகள் நன்மையை ஏற்படுத்தும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று காரிய வெற்றி
ஏற்படுறதுனால இதுநாள் வரைக்கும் இருந்த மனஸ்தாபங்கள் மன வருத்தங்கள் விலகறதுக்கு உண்டான யோகம் ஏற்படுகின்ற சிறப்பான நாள். கடன் உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கு. புதுசா கடன் வாங்குறதுக்கு வாய்ப்பு இருக்கிறதுனால கொஞ்சம் தேவையில்லாத செலவுகளை குறைக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க. கடந்த கால கடன் சார்ந்த விஷயங்கள் சற்று கவலையை ஏற்படுத்தினாலும் அதை சமாளிக்கும் ஆற்றல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு.
ரிஷப ராசி :-
மூன்று மற்றும் ஐந்தாம் வீட்டு அதிபதி பரிவர்த்தனை பெற்றிருப்பது உங்களுக்கு யோகத்தை ஏற்படுத்துகின்றது குறிப்பா
உங்களுக்கு வியாபாரத்தில பண வருமானமும் வெற்றியும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கு. வழக்கு சார்ந்த விஷயங்களில் வெற்றிகள் கிடைக்கும். நீங்க வழக்கறிஞர் இல்ல நீங்க ஏதாவது தொழில் விஷயமா வழக்கு தொடுத்துருக்கீங்க அப்படின்னா அந்த உங்க வழக்கு சார்ந்த விஷயங்கள்ல வெற்றி அடைவீர்கள். அதனால உங்களுக்கு மரியாதை உயர்வு ஏற்படும். உடன் பிறந்தோருடன் குறிப்பா இளைய சகோதரர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்களை கலைவதற்கு உண்டான முயற்சிகள் வெற்றி ஏற்றம் குழந்தைகள் சார்ந்த விஷயங்கள்ல் உங்களுக்கு பெருமிதத்தை ஏற்படுத்துவார்கள். அதனால குழந்தைக மேல
அன்பு பாராட்டுவதற்கு உண்டான யோகம் ஏற்படும். கார்த்திகை: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று குடும்பம் சார்ந்த விஷயங்கள்ல் முக்கிய முடிவுகள் எடுக்கறதுக்கு உண்டான யோகம் ஏற்படுகின்ற சிறப்பான நாள் உங்களுக்கு மனசுக்கு பிடிச்சவங்களால ஆதாயம் ஏற்படும் உங்களுடைய வாழ்க்கை துணையுடன் அன்யோனியம் அதிகரிக்கும் இளம் வயது ஆண் பெண்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலமாக ஆதாயம் அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று குழந்தைகள் விஷயத்தில் நற்செய்திகள் வருவது சந்தோஷத்தை ஏற்படுத்துகின்ற
சிறப்பான நாள் வியாபாரத்தில் வருமானம் அதிகரிப்பு ஏற்படும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களிலோ அல்லது வழக்கு சார்ந்த விஷயங்களிலோ உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். மிருகசீரிஷம் :நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடன் பணியாற்றுபவர்களின் ரீதியான உதவிகள் மூலமாக நன்மைகள் அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு வியாபாரத்தில் வருமானம் அதிகரிப்பு ஏற்படும் உங்களுடைய சுய முயற்சியின் மூலமாக திருமண விஷயத்தில் இருந்த தடைகளை போக்குவீர்கள் காதல் வயப்படுவதற்கு வாய்ப்பு இருக்கறதுனால கொஞ்சம் கேர்புல்லா
இருங்க தேவையான அளவுக்கு பேக்ரவுண்ட் வெரிபிகேஷன் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா காதல்ல இம்ப்ரஸ் ஆகலாம்.
மிதுன ராசி:- ராசிநாதன் புதன் இரண்டாம் இடத்தில இரண்டாம் வீட்டு அதிபதி நான்காம் இடத்தில பரிவர்த்தனை பெற்றிருப்பது உங்களுக்கு நிலம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அதிகரிக்கும் நிலம் சார்ந்த வருமானம் அதிகரிக்கும் அல்லது நிலம் சார்ந்த முடிவுகள் எடுப்பதில் இருந்து வந்த தடைகள் விலகும் வீடு மாற்றத்தின் காரணமாக சந்தோஷ அனுபவங்கள் ஏற்படுவதுக்கு வாய்ப்பு இருக்கு. தாய்வழி உறவுகள் உதவிகரமாக செயல்படுவார்கள். தாயாருடைய தேவையை
பூர்த்தி செய்வதின் மூலமாக மன நிறைவு ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. கடன் உதவிகள் கிடைப்பதற்கோ அல்லது லோன் சாங்கஷன் பேங்க் லோன் சாங்கஷன் ஆகறதுக்கோ வாய்ப்பு இருக்கு. இது உங்களுக்கு குதுகலத்தை ஏற்படுத்தும். மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எடுத்த காரியத்தில் முன்வச்ச காலல் வெற்றி அடையணும்ன்ிற வைராக்கியத்தோடு செயல்பட்டு காரியத்தில் வெற்றி அடைவீர்கள் அதன் மூலமாக உங்களுக்கு எதிரிகள் பார்த்து எதிரிகளை பார்த்து ஆச்சரியப்படக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவீர்கள். தொழில் ரீதியாக உங்களுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படும் வியாபாரத்தில் இருக்கிறவங்களுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படும். ஆனா அதே சமயம் பாத்தீங்கன்னா அலுவலக ரீதியாக உங்களுக்கு பதவி உயர்வு இடமாற்றம் போன்ற விஷயங்களால் இருந்த தடுமாற்றங்கள் விலகும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உத்தியோக மேன்மை ஏற்படுகின்ற சிறப்பான நாள். இத்தனை நாளா ஒரு கம்பெனியில வேலை பண்ணிட்டு இருக்கீங்க. ஒரு கவர்மெண்ட் ஆபீஸ்ல வேலை பண்றீங்கன்னா இப்பொழுது ஏதாவது ஒரு திடீர் முடிவெடுத்து இடமாற்றம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. கடல் கடந்து பயணம் கூட ஆதாயத்தை ஏற்படுத்தும் தாய்வழி உறவுகள் மூலமாக உதவிகள்
கிடைப்பதற்கு உண்டான யோகம் ஏற்படுகின்ற சிறப்பான நாள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உத்தியோக ரீதியாக மேன்மைகள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. சக பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்குதான் இருக்கும் பெருசா எதிர்பார்க்க முடியாது. ஆனால் உங்களுடைய அறிவு அவங்களுக்கு சாதகமான பலன்கள் ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக உங்களுக்கு எதிரியாக அல்லது எதிர்மறை எண்ணங்களாக செயல்பட்டு கொண்டிருந்த உங்களுடைய குடும்ப உறுப்பினர்களே உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள். அதனால உங்களுக்கு அலுவலக ரீதியாக நல்ல
முன்னேற்றம் ஏற்படும்.
கடக ராசி:--
ராசிநாதன் மற்றும் மூன்றாம் வீட்டு அதிபதி பரிவர்தனை பெற்றிருப்பது எடுத்த காரியத்தில் வெற்றி அடைவீங்க. நீண்ட நாட்களாக வழக்குகள் நடந்துட்டு இருக்கு. அதாவது கணவன் மனைவி ஒருவர் டிவோர்ஸ் கேஸ் இல்ல லீகல் என்டாங்கிள்மென்ட் இல்ல ஆபீஸ் சம்பந்தமான பிரச்சனைகள் இல்ல பூர்வீக சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் இல்லது இளைய சகோதர சகோதரிகளுடனான மனஸ்தாபம் போன்ற விஷயங்களில் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களல் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தக்கூடிய
வகையில் இருக்கு எதிரிகள் அடங்கி போவார்கள் எதிரிகளை வெல்லும் ஆற்றல் ஏற்படுகின்ற சிறப்பான நாள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று ஆதாயம் அதிகரிக்கும் நிலம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். வீட்டுக்கு தேவையான விலையுர்ந்த பொருட்கள் வாங்குவதற்கு தங்க நகைகள் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்கு. ஏதாவது ஒரு வழக்கு இருந்ததுன்னா அந்த வழக்குல வெற்றி அடையக்கூடிய சூழ்நிலை இருக்கு அதனால குடும்ப சந்தோஷம் அதிகரிக்கக்கூடிய யோகமான நாள்.
பூசம்:- நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைப்பதற்கு உண்டான
யோகம் ஏற்படும். தந்தையை பற்றிய கவலைகள் விலகும். தந்தையால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் அல்லது மனக்கவலைகள் விலகும். உங்களுக்கு குடும்பத்தாருக்கு நீங்க நல்ல செய்தியை கொடுப்பீர்கள். மன நிறைவை தரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். அதே சமயம் பூமி தொடர்பான விஷயத்தில உங்களுக்கு வருமான அதிகரிப்பு ஏற்படுவதுக்கு வாய்ப்பு இருக்கு.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று தெளிவான சிந்தனை ஏற்படுகின்ற சிறப்பான நாள் குழப்பத்தை நிவர்த்தி பண்ணுவீங்க. குழப்பத்துக்கு திடமான திருடமான முடிவு எடுப்பீங்க. இதனால உங்களுக்கு மரியாதை உயர்வு ஏற்படும்.
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக உங்களுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த வழக்கு விஷயங்களிலோ அல்லது எதிரிகள் விஷயங்களிலோ நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு தீர்ப்புகளை பெற்று தருவதற்கு உண்டான யோகத்தை ஏற்படுத்தும். இதன் மூலமாக நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழுபற நிலைமை மாறி சந்தோஷ அனுபவங்கள் ஏற்படுகின்ற பணவரவு ஏற்படுகின்ற சிறப்பான நாள்.
சிம்மராசி:-
இன்று குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்து அதன் மூலமாக குடும்ப சந்தோஷம் அதிகரிக்கறதுக்கு உண்டான யோகத்தை
ஏற்படுத்துவீர்கள். குடும்பத்தில செலவுகள் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கு. குடும்பத்துக்கு தேவையான நிலம் சார்ந்த முதலீடுகள் வீடு சார்ந்த முதலீடுகள் உங்களுக்கு வெற்றியை தரும். ஆதாயம் அதிகரிக்கறது்க உண்டான யோகம் ஏற்படும். அலுவல் ரீதியாக உங்களுக்கு இடமாற்றம் ஏற்பட்டிருந்ததுனா அந்த இடமாற்றம் உங்களுக்கு சந்தோஷத்தையும் நன்மைகளையும் ஏற்படுத்தும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களிலும் ஆதாயம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. உங்களுடைய மூத்த சகோதர சகோதரிகளின் உதவிகள் மூலமாக அல்லது தந்தை வழி உதவிகள் மூலமாக சொத்து சேர்க்கை
அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று கவலைகள் விலகி சந்தோஷம் அதிகரிக்கும். குடும்ப தேவைகளுக்காக வீட்டில் இருக்கக்கூடிய பொருட்கள் அடமானம் வைக்கறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதன் மூலமாக சொத்து சேர்க்கை ஏற்படுவதுக்கு வாய்ப்பு இருக்கு. நிலம் சார்ந்த முதலீடுகள் ஆதாயத்தை ஏற்படுத்தும் இடமாற்றம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அலுவலக ரீதியாக இடமாற்றம் ஏற்படும். வேலை விஷயமா உங்களுக்கு ப்ரமோஷன் அல்லது டிரான்ஸ்பர் கிடைக்கும். அதன் மூலமாக வீடு
மாற்றம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. சொந்த வீடு வாங்கிட்டு போறதுக்கு கூட வாய்ப்பு இருக்கு. மலைவாசஸ்தலங்களுக்கு இன்றைக்கு எங்காவது டிராவல் போறீங்க டூர் போறீங்கன்னா அது உங்களுக்கு சந்தோஷத்தையும் குதுகளத்தையும் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்க கூடிய நாள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுடைய பதவி உயர்வு சார்ந்த விஷயங்களில் நற்செய்திகள் வரும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிப்பு ஏற்படும். படிக்கின்ற குழந்தைகளுக்கு மேல்படிப்புக்கு உண்டான முயற்சிகளில் செலவுகள் அதிகரிக்கறதுக்கு
உண்டான யோகம் ஏற்படும். அதாவது குடும்பத்தில உங்களுக்கு செலவு பண்ணுவாங்க. குடும்பத்தாரின் செலவுகளை செலவுகளுக்கு நீங்கதான் காரணமாக இருப்பீங்க. அதே சமயம் உங்களுடைய குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலமாக குடும்ப ஒற்றுமை அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.
கன்னி ராசி :--
ராசியில சந்திரன் மற்றும் 11ஆம் இடத்தில புதன் பரிவர்த்தனை பெற்றிருப்பது உங்களுக்கு தனிப்பட்ட மரியாதை உயர்வு ஏற்படுகின்ற சிறப்பான நாள். படிக்கின்ற குழந்தைகள் அறிவு பூர்வமாக செயல்பட்டு உங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்வதற்கும் உங்களுடைய புத்தி
சாதித்தையும் வெளிப்படுத்துவதற்கு வாய்ப்புகள் இருக்கு. சக பணியாளர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில சில மனக்கசப்புகள் வந்ததுன்னா அதை கண்டும் காணாலும் காணாமலும் கடந்து போவீர்கள். அதனால அவங்களுடைய தப்பை பெருசு படுத்த மாட்டீங்க. ஆனா அவங்க கிட்ட எச்சரிக்கையா இருக்க வேண்டிய அவசியம் இருக்கு. அதனால பொறுமையா செயல்படுங்க. மரியாதை உயர்வு ஏற்படுகின்ற சிறப்பான நாள்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உத்தியோக மேன்மை ஏற்படும். இதுநாள் வரைக்கும் வேலை இல்ல அப்படின்னு சொல்லக்கூடிய கன்னி ராசி
நண்பர்களுக்கு இன்று வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. அதே சமயம் தாயாரின் ஆரோக்கியத்தில் மருத்துவ ரீதியான உதவிகள் சந்தோஷத்தை ஏற்படுத்தும். தந்தை வழி உறவுகள் மூலமாக உங்களுக்கு உதவிகள் கிடைக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு.
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மன குழப்பங்கள் நிவர்த்தியாகக்கூடிய சந்தோஷகரமான நாள். தெளிவான முடிவு எடுக்கறதுக்கு உண்டான வாய்ப்பு இருக்கு. தாய்வழி உறவுகள் அல்லது தாயாரின் ஆரோக்கிய விஷயத்தில் உங்களுக்கு நற்செய்திகள் வரும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்கள்ல் நீங்கள் எடுக்கும் முடிவுகள்
உங்க குடும்ப கௌரவத்தை காப்பாற்றி கொடுக்கும். குடும்பத்தில இதுநாள் வரை இருந்து வந்த பண தட்டுப்பாடுகள் விலகறதுக்கு உண்டான யோகம் ஏற்படுகின்ற சிறப்பான நாள்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. கடுமையா உழைக்கிறீங்க. எல்லாமே நல்லதா இருக்கு. ஆனா அவசர புத்தியை வெளிப்படுத்துறீங்க. அதனால உங்களுக்கு தடுமாற்றம் இருக்கும். இன்னைக்கு பதராம செயல்பட்டீங்கன்னா காரியம் சிதராது வெற்றி கிடைக்கும். பதரின காரியம் சிதரும். அதனால பொறுமையா செயல்படுங்க. அலுவலக ரீதியாக சக பணியாளர்களின் தவறுகளை முன்கோபத்தின்
காரணமாக வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்கு. யாரோட தப்பையும் உங்களால மாத்த முடியாது. உங்க தப்பை மாத்திக்கறதுக்கு முயற்சி பண்ணுங்க. அடுத்தவங்க விஷயத்தில் நீங்க தலையிடாமல் இருக்கிறது உங்களுக்கு மனநிம்மதி ஏற்படுத்தும்.
துலாம் ராசி:--
விரைய ஸ்தானத்தில சந்திரன் இரண்டாம் இடத்திற்கு செவ்வாய் மனசு எண்ண விரயங்கள் அதிகரிக்கும் அதனால தவறான வார்த்தை பிரயோகம் உங்க கௌரவத்தை பாதிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு அதாவது இட் இஸ் டைரக்ட்லரபோஷனல்னு சொல்லுவாங்க அதாவது உங்க வார்த்தை விரயங்கள் உங்களுக்கு கௌரவத்தை குறை குறைபடுத்தும் அப்படி இல்ல அப்படின்னா
உங்களுடைய எண்ண விரயங்கள் உங்களுடைய வார்த்தைகளை வெளிப்படுத்தி அதன் மூலமாக கௌரவத்தை குறைச்சிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு வெளியூர் பிரயாணங்கள் உங்களுக்கு ஓரளவுக்கு அனுகூலத்தை ஏற்படுத்தினாலும் கடன் சார்ந்த விஷயங்கள் வெளியூருக்கு போறீங்க அப்படின்னா ஆல்ரெடி கையில பணத்தை வச்சிட்டு போணும் இல்லாட்டி கடன் வாங்க வேண்டிய இடத்தில போற இடத்தில கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் அடுத்தவங்க கிட்ட கையேந்த கூடிய சூழ்நிலை இருக்கு. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது அன்வான்டட் ஆர்கயுமென்ட்ஸ் அன்வான்டட் சில்லி டாக்ஸ்
இத அவாய்ட் பண்ணுங்க. இதை பண்ணினா உங்களுக்கு மரியாதை உயர்வு ஏற்படும். அலுவலக ரீதியாக உங்களுக்கு வெளியூர் பிரயாணங்களோ அல்லது லோக்கல்ல எங்காயாவது வெளியில டிராவல் பண்றீங்கன்னா அது உங்களுக்கு வளர்ச்சியை கொடுக்கும். முதலீடுகள் சுய தொழில் செய்பவர்களுக்கு தொழில் ரீதியான முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். கடன் உதவிகள் கிடைக்கக்கூடிய யோகமான நாள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பின் மூலமாக தாயாரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்துல இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சின்ன ஆர்கியுமென்ட்
இருக்கு. அதனால கொஞ்சம் பொறுமையா பேசுங்க. உங்களுக்கு மரியாதை உயர்வு ஏற்படணும்னா பொறுமையா பேசுறது நல்லது. அவசரப்பட்டு வார்த்தையை விட்டுட்டீங்க அப்படின்னா குடும்பத்தில யாரும் உங்களை மதிக்க மாட்டாங்க. பணவரவில் இருந்த துளைவுகள் விலகும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பிரயாணங்கள் ஆதாயத்தை ஏற்படுத்தும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சந்தோஷ அனுபவங்கள் ஏற்படுகின்ற சிறப்பான நாள். தந்தை வழி உறவுகளால் உதவிகள் கிடைப்பதற்கு சூழ்நிலை சாதகமா இருக்கு. தந்தை உங்களுக்கு சாதகமா அறிவுரை சொல்றது மட்டும் இல்லாம பண உதவியும்
செய்வாங்க. இது உங்களுக்கு மனோபலத்தை கொடுக்கும். உங்ககிட்ட இருக்கக்கூடிய மனஸ்தாபங்கள் அல்லது மன வருத்தங்கள் விலகுறதுக்கு வாய்ப்புகள் ஏற்படுகின்ற சிறப்பான நாள்.
விருச்சிக ராசி :-- லாபஸ்தானத்தில் சந்திரன் மற்றும் ஒன்பதாம் இடத்தில் புதன் பரிவர்த்தனை பெற்றிருப்பது உறவுகள் வகையில் உதவிகள் கிடைக்கக்கூடிய யோகமான நாள் உறவுகள் தந்தை வழி உறவுகள் மூத்த சகோதர சகோதரிகள் பெரிப்பா பையன் சித்தப்பா பையன் உங்களுக்கு மூத்தவர்கள் யாரா இருந்தாலும் சரி உங்களுக்கு நல்லது செய்வாங்க நல்ல அட்வைஸ் கொடுப்பாங்க அவர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும் அலுவலக
ரீதியாக உங்களுக்கு மரியாதை உயர்வு ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு மரி மரியாதை வருவனா வெறும மரியாதை மட்டும் இல்ல பதவி உயர்வும் கிடைக்கறதுக்கு உண்டான யோகம் ஏற்படும். இதன் மூலமாக உங்களுக்கு ராஜாங்க ரீதியாக அல்லது அரசாங்க ரீதியாக உதவிகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கு. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுடைய வியாபார விஷயத்தில் புதிய நபர்களின் அறிமுகம் சற்று சங்கடத்தை ஏற்படுத்தும். அவர்கள் விஷயத்தில் நீங்க கொஞ்சம் கவனமா இருந்துக்கோங்க. மத்தபடி பெருசா லாபம் இல்லை அதே சமயம் பெருசா நஷ்டமும் இல்லை பொறுமையுடன் செயல்படுவது
நல்லது. 9 11 கொடி அதிபதிகள் பரிவர்தலை பெற்றிருப்பது உங்களுக்கு கௌரவத்தை மீட்டெடுப்பதற்கு உண்டான யோகம் ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. உங்க நட்சத்திரநாதன் சனியின் பார்வையில சந்திரன் மற்றும் புதன் பரிவர்த்தனை சனி சந்திரன் புதன் பரிவர்த்தனை அதனால உங்களை பத்தி தப்பா பேசினவங்க எதிர்ல மரியாதை உயர்வோடு நிற்கக்கூடிய வாய்ப்பு இருக்கு. சந்தோஷ அனுபவங்கள் ஏற்படும் செல்வாக்கு அதிகரிக்கும் தன லாபம் அதிகரிக்கறதுக்கு உண்டான யோகம் ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பண வருமானம் ஏற்படுவதுக்கு உண்டான வாய்ப்பு இருக்கு. தனவரவு பொருள் லாபம் ஏற்படும் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. வாழ்க்கை துணையின் ஆரோக்கிய விஷயத்துல செலவுகள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கறதுனால இன்னைக்கு மருத்துவ ரீதியான செலவுகள் உங்களுக்கு மன சஞ்சலத்தை ஏற்படுத்துறதுக்கு வாய்ப்பு இருக்கு. ஒன்னா வாழ்க்கை துணை இல்லாட்டி குழந்தைகள் சார்ந்த செலவுகள் உங்களுக்கு கவலைகளை ஏற்படுத்தும். வீண் விரயங்களை தவிர்ப்பது நல்லது.
தனுசு ராசி:- இன்று உங்களுக்கு
அபிஷயலா நல்ல வெற்றி கிடைக்கறதுக்கு உண்டான யோகம் ஏற்படும். இடமாற்றம் அல்லது சொந்த வீடு வாங்குறதுக்கு உண்டான முயற்சி அல்லது ஏதாவது ஒரு ஸ்திர சொத்துக்கள் ரீதியான முதலீடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும். நீங்க லேண்ட் பிசினஸ் பண்றீங்க, விவசாயம் பண்றீங்க இல்லாட்டி கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ் பண்றீங்க, ரியல் எஸ்டேட் பண்றீங்கன்னா இன்னைக்கு உங்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலமாக புதிய தொழில் ரீதியான முயற்சிகள் வெற்றியை தரும். ஆதாயம் அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு
இருக்கு. தந்தையுடன் இன்று மோதல் போக்கு கடைபிடிக்கறதுக்கு உண்டான சூழ்நிலை இருக்கறதுனால முடிஞ்ச வரைக்கும் நிதானமா பேசுங்க. இன்று வெற்றிகள் கிடைப்பதற்கு எதிரிகளால் ஏற்படுத்துகின்ற தொல்லைகளை சமாளிக்கறதுக்குல்லாம் வாய்ப்புகள் இருக்கு. அதனால உங்களுக்கு மரியாதை உயர்வும் ஏற்படுறதுக்கு உண்டான யோகம் ஏற்படுகின்ற சிறப்பான நாள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில அல்லது தந்தை வகையில உதவிகள் கிடைக்கறதுக்கு உண்டான யோகம் ஏற்படும். உங்களுக்கு ஒரு முக்கிய முடிவு எடுக்கணும் அப்படின்னா ஒன்னா உங்க மேல்
அதிகாரிகள்ட்ட போய் கேளுங்க. இல்லாட்டி உங்க அப்பா கிட்ட அட்வைஸ் கேளுங்க. அது மாதிரி ஒரு நல்ல அட்வைஸ் வேற யாரும் கொடுக்க மாட்டாங்க. குடும்பத்தில இருந்த குழப்பங்கள் நிவர்த்தியாகும். உங்களுடைய வார்த்தைகளின் மூலமாக எதிரிகளையும் வெல்லக்கூடிய ஆற்றல் ஏற்படும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உங்களுக்கு கடன் உதவிகள் கிடைக்கறதுக்கு உண்டான யோகம் ஏற்படுகின்ற சிறப்பான நாள். ஏதாவது ஹவுசிங் லோன் ஏதாவது ட்ரை பண்றீங்க இல்ல ப்ராப்பர்ட்டி லோன் மார்க்கேஜ் லோன் ஏதாவது ட்ரை பண்றீங்கன்னா அதெல்லாம் இன்னைக்கு சாங்கஷன் ஆகறதுக்கு வாய்ப்பு
இருக்கு. சந்தோஷ அதிகரிப்பு ஏற்படும் மூத்த சகோதரர்களின் உதவியை கொண்டு திருமண விஷயத்தில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று புதிய நண்பர்களின் அறிமுகத்தின் மூலமாக அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கக்கூடிய யோகமான நாள் அரசாங்க அதிகாரிகள் மூலமாகவும் ஆதாயம் அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. வேலை சம்பந்தமாக ஏதாவது அலைச்சல் இருந்ததுனா அது உங்களுக்கு வெளியூர் பிரயாணமாக இருக்கும் அது உங்களுக்கு அலைச்சலை கொடுத்து லாபத்தை ஏற்படுத்துவது்க உண்டான வாய்ப்பை ஏற்படுத்தும்.
மகர ராசி:--
பாக்கியஸ்தானம்னு சொல்லக்கூடிய ஒன்பதாம் எட்டு அதிபதியும் சந்திரனும் பரிவர்த்தனை பெற்று இருப்பது பாக்கியஸ்தானத்தில் சந்திரன் இருப்பது உங்களுக்கு தந்தை வழியில குழப்பங்கள் நிவர்த்தியாக கூடிய யோகம் ஏற்படும் இத்தனை நாளா உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தது பண பிரச்சனை குடும்ப பிரச்சனை கடன் கொடுத்தவர்கள் பிரச்சனைன்னு ஏகப்பட்ட பிரச்சனை இருந்தது குழந்தைகள் பிரச்சனை இருந்தது உடன்பிறப்புகள் பிரச்சனை இருந்தது அக்கா தங்க பிரச்சனை இருந்தது இப்படி ஏகப்பட்ட பிரச்சனை இருந்தது இன்னைக்கு அது எல்லாத்தையும் சுமுகமா
ஒவ்வொரு பிரச்சனையா அதாவது டைம் டேபிள் போட்டு இன்னைக்கு இந்த டைம்ல இந்த பிரச்சனை சால்வ் பண்ணனும்ன்ு அழகா ஹேண்டில் பண்ணுவீங்க. இது உங்களுக்கு மனநிறைவையும் புதிய நட்பையும் உறவுகளையும் பலப்படுத்துவதற்கு உண்டான யோகம் ஏற்படும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று நண்பர்கள் மூலமாக அல்லது உங்களுடைய சக பணியாளர்கள் மூலமாக உங்களுக்கு கடன் உதவிகள் கிடைக்கறதுக்கு உண்டான யோகம் ஏற்படும். அல்லது உங்க கடன் அடைக்கறதுக்கு உங்களுடைய தந்தை உதவிகரமாக செயல்படுவாரு. உடன்பிறப்புக்களும் உங்களுக்கு ஆதாயத்தை ஏற்படுத்தி
கொடுப்பாங்க. நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய சிக்கல்கள் குடும்ப சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பண வருமானத்தில் இருக்கும் தொய்வுகளை கலைவதற்கு முயற்சி எடுப்பீர்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உங்களுடைய வீடு மனை சார்ந்த விஷயங்களில் இருக்கும் குழப்பங்கள் நிவர்த்தியாகும். உடன்பிறப்புகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உங்களுக்கு பூர்வீக சொத்துல பங்கு கே்கறதுக்கு முயற்சி எடுப்பீங்க. அதே சமயம் வாழ்க்கை துணையின் ஒத்துழைப்பின் மூலமாக இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள்.
அவிட்டம் நட்சத்திரத்தில்
பிறந்தவர்களுக்கு இன்று தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. என்னதான் சாதகமான நேரமா இருந்தாலும் எதிரிகளின் பலம் அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. எதிரிகள் சற்று கடுமையாக செயல்படுவார்கள். நிதானத்துடன் செயல்படுங்கள். உங்களுக்கு கடன் சார்ந்த விஷயங்கள் அல்லது அரசாங்க ரீதியான விஷயங்கள்ல எதிரிகளின் பலம் அதிகரிக்கிறதுனால அவங்க கிட்ட பேச்சு வார்த்தை நடத்தி முடியும் பேச முடியாது. அதனால இன்னைக்கு விட்டு கொடுத்து செல்வது நல்லது.
கும்ப ராசி :-
இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம் அஷ்டம ஸ்தானத்தில சனியின் பார்வையில் சந்திரன்
இருக்கிறதுனால வார்த்தை குழப்பம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. வார்த்தைக்கும் மனசுக்கும் சம்பந்தம் இல்லை மனசுல ஒன்னு நினைப்பீங்க. இதை சொல்லக்கூடாதுன்னு நினைப்பீங்க. ஆனா யாரு கிட்ட சொல்லக்கூடாதோ அவங்க கிட்டயே போய் உளறிட்டு வருவீங்க. இது உங்களுக்கு தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு இருக்கு. பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில எதிரிகளுக்கு பலத்தை சேர்க்க கூடிய வாய்ப்பு ஏற்படும். அதாவது நீங்க என்ன பண்ணுவீங்க உங்களுக்கு பணம் வர வேண்டியது இருக்குன்னா எந்த இடத்தில இருந்து வருதுன்னு சொல்லக்கூடாதோ அதையே
போய் உளரிட்டு சிக்கலை ஏற்படுத்துவீங்க. ஆரோக்கிய விஷயத்திலும் இன்று சற்று அலைச்சல் ஏற்படுறதுனால உடல் சோர்வு அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தேவையற்ற விமர்சனங்கள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. கூட இருக்கிறவங்க யார் உங்களுக்கு சப்போர்ட்டிவா இருந்தாங்களோ யார வச்சுக்கிட்டு நீங்க பணத்தை கொடுத்தீங்களோ இல்ல பணத்தை வாங்கினீங்களோ அவர்களே உங்களுக்கு விமர்சனங்கள் ஏற்படுத்துவார்கள் அதனால தேவையற்ற சங்கடங்கள் அதிகரிக்கறதுக்கு வாய்ப்பு
இருக்கு. குழந்தைகள் விஷயத்தில் நற்செய்திகள் வரும். வியாபார ரீதியாக உங்களுக்கு ஓரளவுக்கு அனுகூலம் ஏற்பட்டாலும் இன்னைக்கு கைக்கு பணம் வரதுல தாமதம் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்தொழிப்பு சாதகமா இருந்தாலும் உங்களுடைய முன்னுக்கு பின் முரணான வார்த்தை பிரயோகத்தின் மூலமாக தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு ஏற்படும் ஆனால் எதிரிகள் உங்களுக்கு சாதகமா செயல்படுவார்கள் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு படிக்கின்ற
குழந்தைகளுக்கு மேன்மைகள் கிடைக்கிறதுனால குடும்பத்தில உங்களுக்கு எதிரா பேசிட்டு இருந்தவங்க எல்லாம் இன்னைக்கு உங்களுக்கு சாதகமா செயல்படுவாங்க. ஆனா நீங்க பேசுறது எந்த விதத்திலும் சாதகமற்ற சூழ்நிலை இருக்கு. அதே சமயம் வியாபாரிகளை பொறுத்தவரைக்கும் வருமான தடுமாற்றம் ஏற்படும். உங்களுடைய தந்தை வழியில சில ஆலோசனைகள் கிடைச்சதுன்னா உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். குழந்தை வாக்கியத்திற்காக காத்து கொண்டிருக்கும் கும்ப ராசி நண்பர்கள் யாராக இருந்தாலும் சரி அவிட்டம் சதயம் பூரட்டாதி இந்த மூணு நட்சத்திரக்காரங்க யாரா இருந்தாலும்
குழந்தை வாக்கியத்திற்காக திருமணமாகி வெகு நாட்கள் ஆயிடுத்து இல்ல எங்களுக்கு திருமணமாகி ஒரு ஒன் மந்தத் கூட ஆகல அப்படின்னா கூட உங்களுக்கு வம்ச விருத்தி ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கு. அதாவது புதிய வரவின் மூலமாக குடும்ப சந்தோஷம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படும். மனக்குழப்பத்தை போக்குவதற்கு இது உதவிகரமாக இருக்கும்.
மீன ராசி :--
சப்தம ஸ்தானத்திலயும் ஐந்தாம் இடத்திலயும் புதன் சந்திரன் பரிவர்த்தனை பெற்றிருப்பது உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தும் புதிய நண்பர்களின் அறிமுகம் சந்தோஷத்தை ஏற்படுத்தும் வியாபாரிகளுக்கு வெற்றிகள்
கிடைக்கறதுக்கு வாய்ப்பிருக்கு படிப்பு சார்ந்த தொழில் செய்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள் புதிய நண்பர்களின் அறிமுகத்தின் மூலமாக உங்களுக்கு வியாபார வளர்ச்சி ஏற்படுவதுக்கு வாய்ப்பு இருக்கு நிலம் சார்ந்த விஷயங்கள் வீடுமனை மாற்றம் அல்லது நிலம் சார்ந்த முதலீடுகள் உங்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குழந்தைகளின் வளர்ச்சி அமோக பலன்கள் ஏற்படுத்துகின்ற சிறப்பான நாள் குழந்தைகளின் தேவைகளுக்காக இன்னைக்கு முதலீடுகள் அதிகரிக்கறதுக்கோ செலவுகள் அதிகரிக்கறதுக்கோ வாய்ப்பு இருக்கு.
அலுவலக ரீதியாக உங்களுக்கு அரசாங்க தேவைகளுக்காக செலவுகள் ஏற்படுறதுக்கு வாய்ப்பு இருக்கறதுனால கொஞ்சம் அனாவசியமான செலவுகளை தவிர்ப்பதும் அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிபாக்கிகளில் சுணக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்வதும் அவசியமான ஒன்று. உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மனக்குழப்பத்திலிருந்து விடுதலை கிடைக்கக்கூடிய ஒரு சிறப்பான நாள். மனசில் இருக்கிற கவலைகள் போகும். உடன்பிறப்புக்களும் மற்றும் குழந்தைகளும் உங்களுக்கு சாதகமா செயல்படுவாங்க. குழந்தைகளுடைய எதிர்காலம் கருதி நீங்கள் எடுத்த முடிவுகள் வெற்றியை தரும் ஆதாயம்அதிகரிக்கக்கூடியஅதிகரிக்கக்கூடிய சந்தோஷகரமான நாள் வருமான அதிகரிப்பு ஏற்படுகின்ற நாள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று சந்தோஷ அனுபவங்கள் ஏற்படும். குறிப்பா உங்களுடைய வியாபாரத்தில உங்களுடைய அறிவு சார்ந்த தொழில்ல உத்தியோகத்தில நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை மட்டுமல்லாமல் லாபத்தையும் ஏற்படுத்துவத்கு வாய்ப்பு இருக்கு. அலுவலக ரீதியாக உங்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் ஏற்படுகின்ற சிறப்பான நாள். குழந்தைகள் விஷயத்தில் உங்களுடைய குழந்தைகள் குழந்தைகளின்திருமணம் சார்ந்த விஷயங்கள் குழந்தைகளுடைய வேலை சார்ந்த விஷயங்கள்ல நீங்கள் சொல்லும் ஆலோசனைகளை அவர்கள் கேட்டு செயல்படுவதன் மூலமாக வெற்றிகள் கிடைக்கறதுக்கு உண்டான யோகம் ஏற்படும் பெருமிதம் கொள்ளக்கூடிய சந்தோஷகரமான நாள் .
0 கருத்துகள்